Categories
உலக செய்திகள்

“200 கோடி டோஸ் தடுப்பூசிகள்” இந்திய பிரதமரை பாராட்டிய பில்கேட்ஸ்…!!!

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸை தடுப்பதற்காக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. கடந்த வருடம் ஜனவரி 16-ஆம் தேதி முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் 200 கோடி தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதனால் பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி ஒரு ட்விட்டர் பதிவு செய்துள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இவருடைய சிறந்த நிர்வாகத்திற்கான மற்றொரு மைல் கல்லாக 200 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளார். மேலும்  கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும்  அரசாங்கத்துடனான எங்களுடைய தொடர்ச்சியான கூட்டணிக்கு எப்போதும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என பதிவிட்டுள்ளார் ‌

Categories

Tech |