Categories
உலக செய்திகள்

உக்ரைன் அதிபர் மனைவி ஜெராக்ஸ்காவுக்கு….. தேசியக்கொடியின் வண்ணம் கொண்ட பூங்கொத்துகளால் வரவேற்த்த பைடன்…..!!!!

உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ரஷ்ய படைகளின் முழு கவனமும் கிழக்கு உக்ரைன் மீது இருந்தாலும் உக்ரைனின் பிற பகுதிகளில் தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்தி விடவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக உக்ரைன் முழுவதும் உள்ள வணிக வளாக, வர்த்தகம், அடுக்குமாடி குடியிருப்பு என பொது உள்கட்டமைப்பு மீது ரஷ்யா படைகள் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் அமெரிக்க அதிபர் டைட்டனின் மனைவி முதல் பெண்மணி மற்றும் உக்ரைன் அதிபரின் மனைவியான ஒலெனா ஜெயலன்ஸ்கோவை அன்னையர் தினத்தில் சந்தித்து பேசினார்.  போரால் தப்பி வந்த பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

அதனை தொடர்ந்து மரியாதை நிமித்தம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவர் நேற்று முன்தின அமெரிக்க வெளியுறவு மந்திரி பிளிங்கனை சந்தித்து பேசினார். அதன் பிறகு நேற்று மதியம் வெள்ளை மாளிகை சென்று சேர்ந்த அவரை அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் பபைடனின் மனைவி ஜில் பைடன் வரவேற்றுனர். உக்ரைன் தேசிய கொடியின் வண்ணம் கொண்ட மஞ்சள் சூரியகாந்தி, நீல வண்ண ஹைடிராகியாஸ் வகை பூக்கள் மற்றும் வெண்மையான ஆர்கேட் பூக்கள் அடங்கிய பூங்கொத்துக்களை கொடுத்து அவரை பைட்டன் வரவேற்றார். இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “உறுதித் தன்மை மற்றும் மீள் தன்மை ஆகியவற்றை கொண்ட நாட்டில் இருந்து அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் உக்கிரைனின் முதல் பெண்மணி ஓலெனா ஜெலன்ஸ்கோ இருக்கிறார். மேலும் வெள்ளை மாளிகைக்கு அவரை வரவேற்பதில் ஜில் மற்றும் எனக்கு கவுரவம் அளிக்கும் விஷயம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |