கடத்தல் சம்பவங்களால் பாதிக்கப்படும் குழந்தை, பெண்களுக்கு இழப்பீடு பெற்று தர வேண்டும் என்று பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள், ஆணைக்குழு, மாநில மனித உரிமைகள் ஆணையம், தொண்டு நிறுவன கூட்டமைப்பு சார்பில் மனித கடத்தல் தடுப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் மாவட்ட நீதிபதியின் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் கூறியதாவது, குழந்தைகள், பெண்கள் கடத்தலை தடுக்க வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களை தெளிவாக தெரிந்து கொண்டு உதவ வேண்டும் என்றும் கூறினர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த முகாமில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி பாரதிராஜா, வக்கீல்கள், சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.