Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு.. வீண் அலைச்சல் இருக்கும்.. திடீர் கோபம் தலைதூக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத பணவரவு ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். இன்று புத்தி சாதுரியத்தால் உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்ளவீர்கள். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும்.  நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால், கோபம் கொஞ்சம் தலைதூக்கும். இன்று  உங்களை இடையூறு செய்தவர்கள் விலகிச்செல்வார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் இன்று இருக்கும். அந்தப் பயணம் ஆலோசனை கொடுக்கக்கூடியதாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். அலைச்சலும் அதனால் சோர்வும் இருக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். நிதானமாக இருங்கள், மற்றவர்களிடம் பேசும் பொழுது நிதானமாகப் பேசுங்கள். மாணவர்கள் இன்று கல்விக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். விளையாட்டை ஓரங்கட்டிவிட்டு கல்வியில் கவனத்தை செலுத்துவது ரொம்ப சிறப்பு.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு  நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள். உங்கள் வாழ்வில் வறுமை நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

 அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7 நிறம்

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |