Categories
சினிமா

நடிகர் பிரபு, ராம்குமார் மீதான வழக்கு தள்ளிவைப்பு…. சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு…..!!!!

மறைந்த பிரபல நடிகரான சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என இருமகன்களும், சாந்தி, ராஜ்வி என இரண்டு மகள்களும் இருக்கின்றனர். சென்ற 2001- ஆம் வருடம் நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பிறகு 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும் வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இரண்டு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

அவற்றில், இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005ம் வருடம் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளது. ஆகவே பாகப் பிரிவினை செய்துதர உத்தரவிட வேண்டும். எங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை ராம்குமார், பிரபு விற்றிருகின்றனர். அந்த விற்பனையானது பத்திரங்களை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். மேலும் ஆயிரம் சவரன் தங்கநகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபு மற்றும் ராம்குமார் அபகரித்துக் கொண்டனர்.

சாந்தி தியேட்டரிலிருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்களது பெயருக்கு மாற்றிக்கொண்டனர். நடிகர் சிவாஜிகணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது ஆகும். பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ராம்குமார் மற்றும் பிரபு ஏமாற்றிவிட்டனர் என்று அதில் கூறியுள்ளனர். இந்த நிலையில் இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவாஜி கணேசன் எழுதிவைத்த உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என ராம்குமார் மற்றும் பிரபு தரப்பில் வாதிடப்பட்டது. அதன்பின் இவ்வழக்கு ஜூலை 21ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Categories

Tech |