Categories
விளையாட்டு

இவரை போன்ற திறமைமிக்க ஒரு வீரரை ஒருபோதும் தவிர்க்க முடியாது…. தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி மோசமான பேட்டிங் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விராட்கோலி இடம் பெறவில்லை. இதையடுத்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓய்வா..? அல்லது நீக்கமா..? என்ற விவாதம் ரசிகர்கள் இடையில் எழுந்துள்ளது. இந்தநிலையில் விராட்கோலிக்கு விக்கெட் கீப்பர் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவருமான தினேஷ்கார்த்திக் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது ” சென்ற காலங்களில் விராட்கோலி சர்வதேச போட்டிகளில் ரன் குவித்திருக்கிறார்.

இப்போது அவருக்கு ஓய்வு சிறப்பானது ஆகும். கண்டிப்பாக இதன் வாயிலாக அவர் தன்னை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவருவார். அவரால் முன்பு போன்று செயல்பட முடியும் என நம்புகிறேன். விராட்கோலி போன்ற திறமைமிக்க வீரரை ஒரு போதும் தவிர்க்க முடியாது. அணியில் இடம்பிடிக்க வீரர்கள் மத்தியில் எப்போதும் ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும். நாங்கள் இப்போது 20 ஓவர் உலககோப்பையை கருத்தில் கொண்டு விளையாடி வருகிறோம்” என்று அவர் கூறினார். IPL-ல் சிறப்பாக ஆடியதால் தினேஷ் கார்த்திக்குக்கு இந்தியஅணியில் இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் அணியிலும் அவர் தேர்வாகியிருக்கிறார். அவரும் விராட்கோலியுடன் IPLல் பெங்களுரு அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |