Categories
மாநில செய்திகள்

சென்னை மின்சார ரயில் சேவையில் பாதிப்பு….. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் செங்கல்பட்டு திருமால்பூர் வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் மூலம் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வியாபாரிகள் என நாள்தோறும் 3 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை செங்கல்பட்டு இடையே ஊரப்பாக்கம் ரயில் நிலையம் பகுதியில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழிதடத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த ரயில்களின் பயணம் செய்த பயணிகள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரி, அலுவலக செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் கூறியது, சென்னை கடற்கரை தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில்கள் காலை முதல் அட்டவணைப்படி இயக்கப்படவில்லை. மேலும் சிக்னல் கோளாறு பிரச்சனை சரி செய்யப்பட்டு மிக விரைவில் சேவை சீராக நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |