கடகம் ராசி அன்பர்களே..!! இன்று கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உண்மையாகவே இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். உங்களுடைய செயலுக்கு தடைகள் ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள். தொழில் வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்மைகள் நடக்கும்.
உங்களுடைய வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவியும் கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் ஆதரவும் கிடைக்கும். இன்று சாதுரியமான பேச்சால் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்றைய நாள் ஒரு சிறப்புமிக்க நாளாகத்தான் இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சிறப்பாக இருக்கும். தடைகளை உடைத்தெறிந்து முன்னேறிச் செல்லுங்கள். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை:மேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் நிறம்