வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் ஆன IBPSயில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் & சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, UCO வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மொத்தம் 6035 காலிப்பணியிடங்கள் உள்ளது. அதில் கனரா வங்கியில் மட்டும் 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி : டிகிரி
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 20 மற்றும் அதிகபட்சம் 28
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் SC/ST/PWBD/EXSM விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175/- மற்றும் மற்ற மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.850/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.