தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். அடுத்த மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக ஹைதராபாத் திரைப்பட நகரில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த படம் ஜெயில் அதிகாரியாக வரும் ரஜினி சிறைக்குள் நடக்கும் தாதாக்களின் சமூக விரோத திட்டங்களை எப்படி முறியடிகிறார் என்பது போன்ற திரைக்கதை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி நடிக்க உள்ள 170 வது படத்தை கனா படத்தை இயக்கி பிரபலமான அருள்ராஜ் காமராஜ் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் பெயரும் அடிப்படுகிறது. இந்த படத்தை கமலஹாசன் தயாரிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமலஹாசனும் லோகேஷ் கனகராஜூம் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்கள். அப்போது புதிய படத்தில் இணைவது குறித்து பேசியதாக கூறப்படுகிறது.