பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்த தகவலை உளவுத்துறை மூலம் முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பயே அவருடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்ததால் ஜூலை 20-ஆம் தேதி (இன்று) இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, அனுரா குமார, டல்லஸ் அழகப்பெருமாவு ஆகிய 3 பேரும் போட்டியிட்டனர்.
#WATCH Colombo | Sloganeering and protest underway outside Presidential Secretariat after Ranil Wickremesinghe was elected as Sri Lanka President pic.twitter.com/FpTGziAF5M
— ANI (@ANI) July 20, 2022
இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதன்படி புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த மக்கள் அதிபர் செயலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டக்காரர்கள் நேற்று ரணில் விக்ரமசிங்கேவின் உருவ பொம்மையை எரித்தனர். இதனை அடுத்து காவல்துறையினரும் ராணுவ வீரர்களும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இலங்கை மக்கள் ஊழல் இல்லாத அதிபர் வரவேண்டும் எனவும், நாட்டின் அதிபரை பொறுத்து மக்களின் வாழ்வு அமையும் என்பதால், அதிபரை பொறுத்து வருங்கால போராட்டம் அமையும் என கூறியுள்ளனர்.