Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…நிதானமாக இருக்கவேண்டும்…தெளிவான சிந்தனை தோன்றும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, சிலரின் தவறை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகல் இன்று கவனிக்க வேண்டியிருக்கும். திடீர் கோபங்கள் உண்டாகும்.

நிதானமாக இருப்பது ரொம்ப நல்லது. புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப்போடாமல் உடனே முடிவு காண்பது, ரொம்ப நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து ஈடுபட்டு முடிவு காண்பீர்கள்.

வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள், பஞ்சாயத்துகளில் ஏதும் தலையிட வேண்டாம். யாருக்கும் எந்தவித ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவர்களுக்கு பணம் வாங்கித் தருகிறேன் என்று எந்தவித பொறுப்புகளையும் இன்று ஏற்க வேண்டாம். இன்று மாணவச் செல்வங்களுக்கு கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப் பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்ன  தானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்

Categories

Tech |