திருப்பூர் அருகே சரியான நேரத்திற்கு பேருந்துகள் வராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட தேவராயம்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றது. இங்கிருந்து ஏராளமானோர் திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கும் திருப்பூர், அவிநாசி, கோவையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்களும் செல்கின்றார்கள். திருப்பூரில் இருந்து கணியாம்பூண்டி வழியாக அவிநாசிக்கும் அவிநாசியில் இருந்து திருப்பூருக்கும் இரண்டு அரசு டவுன் பஸ்களும் ஒரு தனியார் பஸ் மட்டுமே இயங்கி வருகின்றது.
மேலும் ஒரு அரசு டவுன் பஸ் ஊழியர் பற்றாக்குறை காரணமாக இயக்கப்படுவதில்லை. மேலும் மற்றொரு அரசு பேருந்து சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதனால் சரியான நேரத்திற்கு பஸ்களை இயக்க கோரியும் கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேருந்துகளையும் சிறைப்பிடித்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் சரியான நேரத்திற்கும் கூடுதலாகவும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.