Categories
உலக செய்திகள்

குழந்தைகளை தாக்கிய கொடூர குரங்கு…. தேடும் பணி தீவிரம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

பிரபல நாட்டில் குரங்கை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜப்பான் நாட்டில் உள்ள யமக்குச்சி மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் ஓகோரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கடந்த 8-ம் தேதி ஒரு குரங்கு நுழைந்து பச்சிளம் குழந்தையை கொடூரமாக தாக்கியது. அதன் பிறகு 4 வயது சிறுமியின் கால்களிலும் கொடூரமாக தாக்கியுள்ளதோடு, சில நபர்களையும் தாக்கியுள்ளது. இந்நிலையில் திடீரென மழலையர் பள்ளிக்குள் நுழைந்த குரங்கு அங்கிருந்த ஒரு 4 வயது சிறுமியையும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் குரங்கை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் குரங்கை கண்டுபிடிக்கும் வரையில் காவல்துறையினர் பொதுமக்கள் யாரும் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைக்க வேண்டாம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |