Categories
தேனி மாவட்ட செய்திகள்

தி.மு.க கட்சியின் தீவிரத் தொண்டர்…. வாக்களித்தவர்களுக்கு மொபட்டில் சென்று நன்றி…. வேடிக்கையாக பார்த்து செல்லும் மக்கள்….!!!

தி.மு.க சின்னத்தில் வாக்களித்த மக்களுக்கு தொண்டர் ஒருவர் நன்றி கூறி வருகிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாங்குட்டை பாளையத்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக கட்சியின் தீவிர தொண்டர் ஆவார். இவர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மொபட்டில் சென்று தி.மு.க சின்னத்திற்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்து வருகிறார். இவர் தற்போது தேனிக்கு வந்துள்ளார். இவர் தலையில் வைத்துள்ள தி.மு.க தொப்பியை பார்த்து மக்கள் வடிவேலுவை வேடிக்கையாக பார்த்து செல்கின்றனர்.

இது தொடர்பாக வடிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நான் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறேன். நான் தி.மு.க சின்னத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். கடந்த ஏப்ரல் 13-ம் தேதி சென்னையில் உள்ள அறிவாலயத்தில் இருந்து என்னுடைய பயணத்தை தொடங்கினேன். நான் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டேன். மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து இனி திண்டுக்கல் சென்று அங்கிருந்து என்னுடைய சொந்த மாவட்டமான நாமக்கல்லுக்கு சென்று என்னுடைய பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |