நாளை முதல் மது விற்பனை அதிகரிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அரசின் வருவாய் மதுபானத்தை பொறுத்து இருக்கிறது. மதுபானங்களில் வரும் வருமானத்தை வைத்துதான் தமிழக அரசாங்கமும் அதன் நடவடிக்கையை செயல்படுத்தி வருகின்றது. அந்த அளவுக்கு மது விற்பனை அரசுக்கு வருமானத்தை ஈட்டி தருகின்றது. அதே வேளையில் மதுவை அரசு ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகின்றது.
சிறு வயது உள்ள மாணவர்கள் , சிறுவர்கள் மதுவால் சீரழிகின்றனர் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தாலும் வருமானத்தை ஈட்டிதரும் மதுபானத்தை தமிழக அரசாங்கம் சிறப்பு விழா காலங்களில் இலக்கு வைத்து விற்பனை செய்கின்றது.இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான விலை நாளை முதல் அதிகரிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மதுபிரியர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்