அரியமங்கலம் அருகே உள்ள குப்பை கிடங்கில் 40 ஏக்கர் பரப்பளவு குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில் அங்கு பூங்காவுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலத்தில் 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில் குப்பைகளை அகற்றும் பணிகளானது நடைபெற்று வருகின்றது. தற்பொழுது 40 ஏக்கர் பரப்பளவு வரை குப்பைகள் அகற்றப்பட்டு விட்டது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் கூறியுள்ளதாவது, அரியமங்கலம் குப்பை கிடங்கில் இன்னும் ஒன்றரை வருடங்களில் அனைத்து குப்பைகளும் அகற்றப்பட்டுவிடும்.
மேலும் முழுவதுமாக பயன்பாட்டிற்கு வந்துவிடும். மாநகராட்சிக்குள் 47 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் தற்போது மீண்டும் கிடைத்திருப்பது பெரிய விஷயம். மேலும் அந்த இடத்தை எந்த மாதிரியான பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என இதுவரை திட்டமிடவில்லை. ஆனால் டெல்லியில் இதே போல் இருந்த குப்பை கிடங்கை அகற்றிவிட்டு மிகப் பெரிய பூங்காவும் பூங்காவின் கீழ் வணிக வளாகம் அமைத்திருக்கின்றார்கள். இதேபோல் இங்கு கொண்டு வரப்படுமா என்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். கண்டிப்பாக மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றத்திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.