அமெரிக்கா நாட்டிலுள்ள வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் வில்லியம் ஜோன்ஸ்(32). விவசாயத் தொழில் செய்து வரும் இவர் சமையல் எரிவாயு வாங்க ஒரு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே லாட்டரி டிக்கெட் விற்கப்பட்டது. இதனை கண்ட அவர், குறைந்த தொகைக்கு ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அந்த டிக்கெட்டில் அவருக்கு 500 டாலர் பரிசு விழுந்தது (இந்திய மதிப்பில் ரூ.39,942). இதையடுத்து மீண்டும் ஒருமுறை 20 டாலர் பணத்துக்கு சீட்டு வாங்கியுள்ளார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக அவருக்கு 100 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கிடைத்துள்ளது (இந்திய மதிப்பில் ரூ.7,98,88,85). இந்த அதிர்ஷ்டத்தை சற்றும் எதிர்ப்பாராத வில்லியம், கிடைத்த லாட்டரி பணத்தை தனது திருமணத்திற்கு செலவிடப்போறதாக கூறியுள்ளார்.