Categories
உலக செய்திகள்

“உக்ரைனுக்கு துல்லியமான ராக்கெட் ஏவுகணைகளை அனுப்புவோம்”…. பிரபல நாடு உறுதி…..!!!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா நேற்று அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே உரையாற்றினார். இந்நிலையில் அவர் பேசியதாவது “துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வராமல் பயங்கரவாதம் தொடர்கிறது. இப்போரில் கொல்லப்பட்டவர்கள், கை-கால்களை இழந்தவர்கள், இன்னும் உயிருடன் இருப்பவர்கள், போர் நடைபெறும் முன்களப் பகுதியிலிருந்து தங்களது குடும்பத்தினர் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். இதனிடையில் நான் கேட்க விரும்பாத ஒன்றைக் கேட்கிறேன்.

அதாவது ஆயுதங்களைக் கேட்கிறேன். ஏவுகணை தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை கேட்கிறேன்” என்று கூறினார். இதனையடுத்து உக்ரைனுக்கு அதிக எண்ணிக்கையிலான துல்லியமான ராக்கெட் ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்கா உறுதியளித்து இருக்கிறது. உக்ரைனில் கிழக்கு தொழில்துறை பகுதியான டான்பாஸ் பகுதிகளை தன் வசம் கொண்டுவந்துள்ள ரஷ்யா, அவற்றையும் தாண்டி உக்ரேனின் பிற பகுதிகளை கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டிருப்பதாக தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் விரைவில் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவதாக அமெரிக்கா உறுதியளித்து உள்ளது.

Categories

Tech |