அமெரிக்க பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கு இணையதளம் மூலமாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முஸ்மல் சிப்ரா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவருடைய அழைப்பின் பேரில் 21 வயது இளம் பெண் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சிக்கு வந்துள்ளார். இவர் தற்போது போர்ட் மன்ட்ரோ என்ற மலை வாசஸ்தளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருக்கிறார். கடந்த 7 மாதங்களாக சுற்றுலா விசா மூலமாக பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க பெண்ணை முஸ்மல் சிப்ரா மற்றும் அவருடைய நண்பர் அசாம் கோசா ஆகியோர் நேற்று கான் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு இளம் .பெண்ணை முஸ்பல் சிப்ரா மற்றும் அசாம் கோசா ஆகிய 2 பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பிறகு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை செல்போனில் 2 பேரும் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு வெளியில் சொன்னால் வீடியோவை ஊடகத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனையடுத்து இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகளை வீடியோ பதிவின் மூலம் பேசி வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக எல்லை இராணுவ காவல்துறையினர் முஸ்பல் சிப்ரா மற்றும் அசான் கோசா 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.