Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை 23 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…..!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்து சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |