Categories
தேசிய செய்திகள்

ஜம்மு முன்னாள் முதலமைச்சர்கள் மீது பி.எஸ்.ஏ. வழக்கு..!!

காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களான உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிவந்த சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு- காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எவரொருவரையும் விசாரணை இல்லாமல் மூன்று மாதங்கள் வீட்டுக்காவலில் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |