கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுமுறை அளித்த 987 தனியார் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் எச்சரிக்கையை மீறி கடந்த 18-ம் தேதி விடுப்பு அறிவித்ததற்கு பதில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டு செயல்படுவோம் என்று பள்ளிகள் சமர்ப்பித்த விளக்கத்தை ஏற்று, நடவடிக்கை எடுக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.