உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், ராணுவ வீரர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் போரால் இதுவரை 15 ஆயிரம் ரஷ்ய படைகள் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 45 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.