இலங்கை நாடாளுமன்றத்தில் 219 வாக்குகளுடன் வெற்றி பெற்று நாட்டின் 8-ஆவது அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்து, கடும் நெருக்கடியான நிலை ஏற்ப ட்டது. எனவே, அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் மாளிகையிலிருந்து தப்பிவிட்டார். அதனைத்தொடர்ந்து, தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அதன்பின், நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்தனர். இந்நிலையில், நேற்று முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபரை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர். அதில் 223 வாக்குகளில் 219 வாக்குகளுடன் முன்னிலையில் இருந்த ரணில் விக்ரமசிங்கே, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, தற்போது நாட்டின் எட்டாவது அதிபராக விக்ரமசிங்கே பொறுப்பேற்றிருக்கிறார்.