கர்நாடக மாநில கதக் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்க பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனால் அரசு இதுவரை பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்கவில்லை. இந்நிலையில் அரசின் மெத்தென போக்கை கண்டிக்க கூடிய வகையில் அங்குள்ள மக்களே தென்னங்கீற்றில் இருந்து பேருந்து நிலையம் அமைத்தனர்.
அதன்பிறகு அந்த பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதற்காக எருமை மாட்டை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தனர். இதனையடுத்து எருமை மாட்டை முன்னிலைப்படுத்தி கிராம மக்கள் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர். இந்த புகையை படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.