பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாரதியார் பாடலை அருணாச்சலப்பிரதேச சகோதரிகள் பாடியதைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்த பிரதமர் நரேந்திரேமோடி அவர்களுக்கு தமிழிலேயே பாராட்டு தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப்பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு தொலைக்காட்சியில் கவிஞர் சுப்ரமணிய பாரதியாரின் “பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு” எனும் சுதந்திரப் போராட்ட பாடலை அம்மாநிலத்தின் சகோதரிகள் தமிழில் பாடி அசத்தி இருக்கின்றனர். இதனையடுத்து இந்த சுதந்திரப் போராட்ட பாடலை பாடிய அந்த சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தமிழில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் “இதனைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும், உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்தநிலைக்கு எடுத்து போகும் அடிப்படையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு என் பாராட்டுக்கள்” என அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அருணாச்சலபிரதேசத்தின் முதல்வர் பிரேம கண்டு பதிவிட்டுள்ள விடியோ ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி ரி-ட்விட் செய்துள்ளார்.
இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள். https://t.co/XtRSoYWT1y
— Narendra Modi (@narendramodi) July 20, 2022