Categories
மாநில செய்திகள்

பிரதமரை சந்திக்க ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் திட்டம்…. யாருக்கு முதலில் வாய்ப்பு கிடைக்கும்…!!!

பிரதமரை சந்திப்பதற்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பதவியேற்ற பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை அனைத்து பதவிகளில் இருந்து நீக்கியதோடு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார். ஆனால் ஓபிஎஸ் தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்றும், என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது எனவும் கூறி வருகிறார். இந்நிலையில் அம்மா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு டெல்லியே தீர்வு வழங்கி வருகிறது. தற்போதும் பிரதமரை யார் முதலில் சந்திப்பது என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதனையடுத்து வருகிற 27-ம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் அரசு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். அதன்பிறகு ஜூலை 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக நேரம் கேட்டிருக்கும் நிலையில், இபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களை குறி வைத்து நடக்கும் வருமானவரித்துறை சோதனைகளை பற்றி பிரதமரிடம் கூற இருப்பதாகவும், ஓபிஎஸ் தன் பக்கம் இருக்கும் நியாயங்களை பிரதமரிடம் கூற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |