‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மூத்த இயக்குநர்களும் நடிகர்களுமான பாரதி ராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
ரிச்சார்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் அப்துல் காலிக் என்னும் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயரை படக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து மாநாடு படப்பிடிப்பு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்க உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
’மாநாடு’ படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகளால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைந்துள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
#Maanaadu shoot Starts on this feb 19th in a grand manner!
#STR@vp_offl @iam_SJSuryah @kalyanipriyan @johnmediamanagr
— sureshkamatchi (@sureshkamatchi) February 6, 2020