நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து பெய்துள்ளது. இதனால் ஆங்காங்கே மின்கம்பங்கள் விழுந்தது. இதனை சீரமைக்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் ஊட்டியில் காந்தல் முக்கோணம் பகுதியில் நூற்றிற்கும் அதிகமான குடியிருப்பு பகுதிகள் இருக்கிறது. இங்கு காளான் தொழிற்சாலைக்கு பின்புறம் மின்மாற்றி ஒன்று அமைந்திருக்கிறது. தொடர் மலையின் காரணமாக அதன் கீழ்பகுதியில் மண் சரிந்திருப்பதால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்துவிடும் அபாயம் இருக்கிறது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதனால் உடனடியாக அந்த மின்மாற்றியை மாற்ற அதிகாரிகள் முன் வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Categories