கடலில் நண்டு பிடி பொறியின் கயிற்றில் சிக்கி கொண்டுள்ள டால்ஃபினை பத்திரமாக மீட்டனர்.
அமெரிக்க நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள கிளியர் வாட்டர் நகர் அருகில் அமைந்துள்ள கடலில் நண்டு பிடிக்க போடப்பட்டிருந்த பொறியின் கயிற்றில் இளம் டால்பின் ஒன்று சிக்கிக்கொண்டுள்ளது. அதனைக் கண்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் கடல் வாழ் உயிரின அருங்காட்சியாக அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர்.
அந்த அதிகாரியின் உதவியுடன் டால்பினை மீட்டு கடலில் விடுவித்தனர். அந்த சமயத்தில் சரியாக நீந்த முடியாமல் டால்பின் தவித்தது. பின்னர் அந்த டால்பினை கடல் வாழ் உயிரினங்கள் மறுவாழ்வு மையமான சீ வோல்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.