தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டு தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த மாணவி மரணம் அடைந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், வன்முறை தொடர்பாக விசாரிப்பதற்கு சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளியில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு உளவுப்பிரிவு காவல்துறையினர் சரிவர செயல்படாததும், காவல்துறையினரின் அலட்சியமும் தான் காரணம் என பல்வேறு தரப்பில் இருந்து குற்றம் சுமத்தப்பட்டது.
இதன் காரணமாக உளவுத்துறை ஐஜி ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அமலாக்க பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து உளவுப்பிரிவு புது ஐஜியாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி செல்வகுமார் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திருவல்லிக்கேணி காவல் ஆணையர் பகலவன் புதிய எஸ்பி ஆக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த 10 உயர் காவல்அதிகாரிகளும் பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.