Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை…. ஆளுநர் தமிழிசை விளக்கம்….!!!!!!!!!

அரவிந்தோ சொசைட்டியில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப பள்ளிகளை உருவாக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பொது செய்தி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் கல்வியில் தரத்தை உயர்த்தவும் டிஜிட்டல் வகுப்பறை அமைத்து நவீனமாக தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும். மேலும் புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்க வழி இல்லை. மொழி சொல்லித் தருவதை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் தாய்மொழி கல்வியை தான் புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்துகின்றார்கள். தாய் மொழியில் பேசினாலும் தாய் மொழியில் எவ்வளவு பேர் கற்கின்றார்கள்.

தாய்மொழி கல்வி பின்வரிசையில் தான் இருக்கிறது. ஆங்கில வழிக் கல்வியை தான் பெரும்பான்மையாக பேசி வருகின்றனர். நோபல் பரிசு வென்ற பலரும் தாய்மொழியில் கற்றவர்கள் தான் அதனால் தான் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். மேலும் குழந்தைகளின் கிரகிப்புத்தன்மை மேம்படும் வேறு மொழிக்கும் திணிப்பு மொழிக்கோ புதிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் தரவில்லை என தெரிவித்துள்ளார்.  புதிய கல்விக் கொள்கையை முழுவதுமாக படியுங்கள் திடீரென கொண்டுவரப்படவில்லை பல நன்மைகள் உள்ளது. இடைநிற்றல்  இருக்காது. குழந்தைகள் வகுப்பறையை  தாண்டி உலக அரங்கில் உயர்ந்தவர்களாக மாறவே தான் இந்த முறை அமலாகின்றது. தற்காப்பு கலையை அனைத்து பள்ளிகளிலும் சொல்லித் தர வேண்டும்.

புதுச்சேரியிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் அதேபோல குழந்தைகளுக்கும் கவுன்சிலிங் தர ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என கூறியவர் தமிழக பாடத்தோடு புதுச்சேரி காரைக்கால் இணைந்திருக்கின்றது. சிபிஎஸ்சி பாடத்திட்டம் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றோம். கல்வி வாரியம் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதுச்சேரியில் நிச்சயமாக அமல்படுத்தப்படும் முதலிலேயே எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்திப்போம். மேலும் வருங்காலம் சவாலான காலம் உலக அரங்கங்களில் போட்டியிட வேண்டும். சவால்களை சந்திக்க குழந்தைகளை தயார் செய்யவே புதிய கல்விக் கொள்கை அக்ஷயா பாத்திரத்திட்டத்தில் தரப்படும் மதிய உணவு தொடர்பாக கருத்துக்கள் கேட்டு வருகின்றோம் என தெரிவித்திருக்கின்றார்.

Categories

Tech |