Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த டாக்ஸி ஓட்டுநர் …!!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டாக்ஸி ஓட்டுநர் மருத்துமனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் அனுதின் சார்ன்விராகுல் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சீனாவில் மட்டும் இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ், இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குல் காரணமாக சீனாவுடனான தொடர்பை பல்வேறு நாடுகளும் நிறுத்தியுள்ளன.

தாய்லாந்தில் சீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற டாக்ஸி ஓட்டுநர் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேருக்கு அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இதனிடையே தாய்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபரான அந்த டாக்ஸி ஓட்டுநர், தற்போது முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அனுதின் சார்ன்விராகுல் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அவரது உறவினர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |