Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?….. வெளியான பட்டியல் …..!!!!

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் பெரும் பிரச்சனையாக உள்ளதால் நிறைய பேர் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கின்றனர். அதேசமயம் வாகனங்கள் வாங்க நினைப்பவர்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்புகின்றனர். இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் மின்சார வாகனங்களை பயன்படுத்தும் டாப் 10 மாநிலங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மொத்தம் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 13,34,385 . இதில் உத்திரபிரதேசம் 337180 ,டெல்லி 158393,  கர்நாடகா 120532, மகாராஷ்டிரா 116646, பீகார் 83335, தமிழ்நாடு 82052 , ராஜஸ்தான் 81338, அசாம் 48767 , மேற்கு வங்கம் 48767, குஜராத் 45272 மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த வாகனங்களின் எண்ணிக்கை பதிவு அடிப்படையில் 27,25,87,170 ஆக உள்ளது. இது உலகின் 209 நாடுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 13.24 சதவீதமாகும்.

Categories

Tech |