தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் .இது குறித்து பாமக தலைவர் அன்புமணி தனது ட்விட்டரில், “தமிழகத்தில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்ச ரூ.5 முதல் ரூ.45 விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த காரணத்தில் ஏழை மக்களை பாதிக்கும் வகையில் இந்த விலை உயர்வு நியாயமற்றது, ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த மார்ச் மதத்தில் தான் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் மீண்டும் விலை உயர்வு தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதனை தொடர்ந்து தயிருக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது தான் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் 5% மட்டும் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், 20% விலையை உயர்த்துவதும், நெய் மீதான எந்த வரி உயர்த்தப்படாத நிலையில் அதன் விலையயும் அரசு உயத்துவதும் எந்த வகையில் நியாயம்?. இதனையடுத்து குஜராத்தின் அமுல், கர்நாடகத்தில் நந்தினி போன்ற பால் பொதுத்துறை நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி விலக்கு பெறப்பட்டுள்ளது. அதனைப் போல ஆவினுக்கும் பெற வேண்டுமே தவிர விலையை உயர்த்த கூடாது. மேலும் விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்ப பெறவேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.