பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ஐந்து சதவீத வரி விதிக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவு பெரும் எதிர்ப்புக்கு வழிவகுத்தது. இந்நிலையில் தற்போது எம்பி சசி தரூர் ஒரு சுவாரஸ்யமான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். பனீருக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி, வெண்ணெய்க்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி, மசாலாவுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி. பன்னீர் பட்டர் மசாலா மீது ஜிஎஸ்டியை கணக்கிட முடியுமா என்று வாட்ஸ்அப் செய்தியை தரூர் அனுப்பியுள்ளார்.
உணவுப் பொருட்களுக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி விதிக்கும் மத்திய அரசின் முடிவை கிண்டலடித்து செய்தி பரவி வருகிறது. முன்னதாக, பனீர் உள்ளிட்ட அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கும் ஐந்து சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.