Categories
மாநில செய்திகள்

“வெல்கம் டூ சென்னை” செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரம்மாண்டமான வரவேற்பு பாடல் வெளியீடு ….!!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாடுக்கான வரவேற்பு பாடல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் மற்றும் ஏ.. .ஆர்.ரகுமான் இணைந்து எழுதிய இந்த பாடலுக்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின், நடிகை அதிதி சங்கர் மற்றும் இந்தியாவின் அனைத்து செஸ் வீரர்களும் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளனர்.

Categories

Tech |