Categories
கரூர் திருச்சி மாவட்ட செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்..!!

திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பொலிரோ கார் திடீரென சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணராயபுரம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது காரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே ஓட்டுநர், காரில் பயணித்த 3 பேர் சாலையில் காரை நிறுத்திவிட்டு இறங்கி உயிர் தப்பினர்.

மேலும் அருகில் இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயில் தண்ணீர் ஊற்றியும், தீ அணைந்தபாடில்லை. மேலும் அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மேலும் நடு வழியில் கார் தீ பற்றி எரிந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |