Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வலி தாங்க முடியவில்லை” கர்ப்பிணி பெண் தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆட்சிபுரத்தில் அழகுமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி(32) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த சில வாரங்களாக அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜலட்சுமி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |