Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள எண்டப்புளி புதுப்பட்டி பகுதியில் பிச்சை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபிலேஷ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கபிலேஷ் உறவினர் ஒருவருடன் பெரியார் பிரதான நீர் பாசன கால்வாயில் குளித்து கொண்டிருந்தான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைப்பட்டி பகுதியில் இருக்கும் கால்வாயில் கபிலேஷின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |