Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“குடிநீர் வராமல் தவித்த கத்தலூர் ஊராட்சி பொதுமக்கள்”….. காலி குடங்களுடன் சாலை மறியல்….!!!!!

கத்தலூர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட ரோட்டாத்துப்பட்டி, குளத்தாத்துபட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் சென்ற 10 நாட்களுக்கு மேலாக இங்கு குடிநீர் வராமல் இருந்திருக்கின்றது. இதனால் பொதுமக்கள் கிணறு மற்றும் கோரையாற்றில் குழி தோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள்.

இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஊராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட்டு நேற்று காலை 9 மணி அளவில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின் சமரசமான பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |