மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலியவிளை பகுதியில் ஜெரின்(22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருமனை பகுதியில் 11-ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ஜெரின் வீட்டிற்குள் நுழைந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதனை அடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் மாணவி நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஜெரினை கைது செய்தனர்.