கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு மன உளைச்சல் காணப்படும்.
பாடல்கள் கேட்பது போன்றவை மூலம் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. இன்று உங்களின் பணியிடச்சூழல் சுமூகமாக இருக்காது. இன்று உங்களின் துணையுடன் மனம் திறந்து பேசத் தயங்குவீர்கள். இன்று உங்களுக்கு பணப்புழக்கம் குறைந்தே காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று அடிப்படைத் தேவைகளை சமாளிப்பது கடினமாக இருக்கும். செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். நீரினை அதிகமாக பருகவேண்டும். மாணவ மாணவியர்கள் யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வது மூலம் மனம் தெளிவுப்பெறும். இன்று நீங்கள் முருகனை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.