ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்சி சாலையில் இருக்கும் ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் சென்ற 18ஆம் தேதி சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பி இருக்கின்றார். அப்போது நாமக்கல்-திருச்சி இடையிலான சாலை பழைய கோர்ட் கட்டிடம் அருகே காரை நிறுத்தியதாக சொல்லப்படுகின்றது அப்போது அங்கு வந்த மர்ம நபர் கத்தியால் குமரேசனின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதனால் குமரேசன் அலறியதால் அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதையடுத்து இது குறித்து அவரின் மனைவி துர்கா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தனிப்படை போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றவாளியை நெருங்கியதாகவும் கூறப்படுகின்றது. மேலும் போலீஸ்சார் குற்றவாளியை கைது செய்தால் தான் கொலை குறித்த காரணம் தெரிய வரும் என கூறியுள்ளனர்.