தனுஷ் செய்ததை பார்த்த ரசிகர்கள் எதை எப்பொழுது செய்ய வேண்டும் என தெரிந்து வைத்திருக்கிறார் என கூறி வருகின்றார்கள்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் ஹாலிவுட் திரைப்படத்தில் தி கிரே மேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. முன்னதாக தனுஷ் அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் அணிந்து வந்த உடைகள் பற்றி பேசப்பட்டது. பின்னர் பிரீமியர் ஷோவில் தனது மகன்களுடன் கோர்ட் சூட்டில் வந்து கலந்து கொண்டார்.
அப்பொழுதும் தனுஷ் பற்றி தான் பேசப்பட்டது. பின் அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு வந்தார். அப்பொழுது தி கிரே மேன் ப்ரீமியர் ஷோவில் கலந்து கொண்ட தனுஷ் வெள்ளை வேட்டி சட்டையில் பங்கேற்றார். தனுஷ் ஹாலிவுட் பட நிகழ்ச்சிக்கு வேட்டி, சட்டை அணிந்து வந்து பாரம்பரிய உடை குறித்து உலக அளவில் பேச வைத்தார். இந்நிலையில் ஒரு விஷயத்தில் தனுஷ் ரொம்ப தெளிவாக இருப்பதாகவும் எங்கு எதை அணிய வேண்டும் எனவும் தெரிந்து வைத்திருக்கின்றார் என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.