அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் நீண்டகால உதவியாளராக பணியாற்றிய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரோகினி கொசோக்லு ராஜினாமா செய்கிறார்.
இலங்கை நாட்டின் அமெரிக்கரான ரோஹினி கொசோக்லு (Rohini Kosoglu), அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகர் பதவியிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸின் நீண்டகால உதவியாளராகவும் ஆலோசகராகவும் இருந்த கொசோக்லு, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஹாரிஸின் அணியிலிருந்து வெளியேறுகிறார். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு இவர் ஆலோசனை வழங்கி வந்தார். ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவத்துடன், கொசோக்லு தேசிய பிரச்சாரங்கள் மற்றும் கேபிடல் ஹில் ஆகியவற்றில் மூத்த பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். அவர் பெரிய மற்றும் சிக்கலான நிறுவனங்களை நிர்வகிப்பதில் நிபுணர் என கூறப்படுகின்றது. ஹாரிஸின் நீண்டகால உதவியாளராகவும் ஆலோசகராகவும் இருந்த கொசோக்லு, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஹாரிஸின் அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.
அவருக்கு ஒன்பது, ஆறு மற்றும் கிட்டத்தட்ட மூன்று வயதில் மகன்கள் உள்ளனர். மூன்று பிள்ளைகளுக்கு தாயான கொசோக்லு தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகக் கூறியுள்ளார். துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு ஏதேனும் நம்பகமான தகவல் அல்லது ஆலோசனை தேவைப்பட்டால் தான் எப்போதும் உதவி செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், தான் இப்போது எடுத்திருக்கும் இந்த முடிவிற்கும் கமலா ஹாரிஸ் ஆதரவாகவும் வழிகாட்டுதலாகவும் இருந்தார் என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2016- ஆம் ஆண்டில் ஹாரிஸ் முதன்முதலில் செனட்டில் சேர்ந்தபோது, கொசோக்லு ஹாரிஸின் துணைத் தலைமைப் பணியாளராக இருந்தார். பின்னர், ஹாரிஸின் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களின் உள்வட்டத்தில் கொசோக்லு முக்கிய இடத்தை பிடித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், அவர் தனது அமெரிக்க செனட் அலுவலகத்தில் ஹாரிஸின் மூத்த ஆலோசகராகவும், பின்னர் ஹாரிஸின் ஜனாதிபதி பிரச்சாரத்தின்போதும் பணியாற்றினார். கொசோக்லு அமெரிக்க செனட்டரின் துணைத் தலைமைப் பணியாளராகப் பணியாற்றிய முதல் தெற்காசியப் பெண்மணி ஆனார் மற்றும் அவரது பதவிக்காலத்தில் அந்தப் பொறுப்பில் பணியாற்றிய ஒரே ஆசிய அமெரிக்கராவார்.