Categories
தேசிய செய்திகள்

இதை செய்தால் 1000 பேருக்கு ரூ.1 லட்சம் பரிசு…. நித்தியானந்தா வெளியிட்ட கலக்கல் அறிவிப்பு….!!!!

சாமியார் நித்தியானந்தா மூன்று மாதங்களுக்கு பின்னர் கடந்த 13ஆம் தேதி குரு பூர்ணிமா அன்று சமூக வலைத்தளம் மூலமாக நேரலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பிறகு நேற்று இரவு மீண்டும் நேரலையில் தோன்றி உரையாற்றினார். அப்போது, சதுர் மாசியா விரதத்தில் ஒரு கோடி மக்களை ஏழ்மையில் இருந்து மீட்க வேண்டும் என்றும் ஒரு கோடி மக்களுக்கு சமாதி நிலையை பயிற்றுவிக்க வேண்டும் எனவும் கூறினார்.

உலகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும் ஆயிரம் பேருக்கு பல ஒரு லட்சம் ரொக்க பரிசு கைலாச சார்பில் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு எனது சீடர்கள் மட்டுமல்லாமல் தனிப்பட்ட நண்பர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர், முகவரி, புகைப்படம் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்தால் மட்டும் போதும்.தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்களோ அந்த நாட்டின் பண மதிப்பில் அவர்களுக்கு ரொக்கமாக ஒரு லட்சத்துடன் கைலாசாவின் அன்னலட்சுமி விருதும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Categories

Tech |