பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்பட குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகின் பிரபல நட்சத்திரமான பார்த்திபன் அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல். இத்திரைப்படம் புதிய சாதனை படைத்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் பார்த்திபன் பல சோதனை படங்களை எடுத்து சாதனை படங்களாக்கி வருகின்றார். இவர் ஒத்த செருப்பு திரைப்படத்தை கையிலெடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவர் தற்போது இரவின் நிழல் படத்தில் புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கின்றார். உலகிலேயே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான்-லீனியர் படம் இரவின் நிழல்தான். இதனால் இத்திரைப்படம் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்று சாதனை படைத்திருக்கின்றது.
இந்த படம் வெளியாகி சில விமர்சனங்களை பெற்றாலும் பலரும் பார்த்திபனின் முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இரவின் நிழல் பட குழுவை பாராட்டி தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே சாட்டில் முழு படத்தையும் எடுத்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்று உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும் அனைத்து பட குழுவினருக்கும் மதிப்பிற்குரிய ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் முக்கியமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்டர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் என கூறியுள்ளார்.