தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (22-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம்:
திருப்பூர் சந்தைபேட்டை துணை மின் நிலையத்தில் செரீப் காலனி பீடரில் உயர் மின் அழுத்த பாதையில் மின் கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட குறிஞ்சி நகர், அரண்மனை புதூர், கே.எஸ்.சி.ஸ்கூல் ரோடு, அரிசி கடை வீதி, தாராபுரம் சாலை ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
இதுபோல் திருப்பூர் குமரன் சாலை துணை மின் நிலையத்துக்குட்பட்ட ஆலாங்காடு மின் பாதையில் மின் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட வாலிபாளையம் மெயின் ரோடு, எச்.டி.எப்.சி. பேங்க் வீதி, மணிக்காரர் சந்து, வாலிபாளையம் சந்து, கண்ணன் டிப்பார்ட்மென்ட் வீதி, என்.எம்.அப்பார்ட்மென்ட், சேம்பர் ஹால் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
திருப்பூர் கலெக்ட ரேட் துணை மின்நிலையத்தில் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகவதி நகர், ஜி.கே.எம்.பராசெஸ், எஸ்.பி. ப்ராசெஸ், ஆல்வின் ஏரியா, தண்டுக்காரன் தோட்டம், கருவேலன் காட்டு தோட்டம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
பொங்கலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி, உகாயனூர், என்.என். புதூர், காங்கேயம்பாளையம், ஓலப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம் புதூர் துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம்:
காரணம்பேட்டை, செங்கத்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை ( ஜூலை 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். காரணம்பேட்டை துணை மின் நிலையம்: காரணம்பேட்டை, பருவாய், சங்கோதிபாளையம், பெருமாள்கவுண்டம்பாளையம். செங்கத்துறை துணை மின் நிலையம்: செங்கத்துறை, ஏரோநகா், பி.என்.பி.நகா், காடாம்பாடி, காங்கயம்பாளையம், மதியழகன் நகா்.
சிவகங்கை மாவட்டம்:
தேவகோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வை பொறியாளா் சி. ரவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேவகோட்டை உபகோட்டத்திற்குள்பட்ட பூசலாக்குடி துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே கண்ணங்குடி, கப்பலூா், அனுமந்தங்குடி, கண்டியூா், நாரணமங்கலம், மு. சிறுவனூா், சாத்தனக்கோட்டை, தேரளப்பூா், சிறுவாச்சி, தோ்போகி, குடிக்காடு, கொடூா், வெங்களூா், மன்னன்வயல், தாழையூா் ஆகிய கிராமங்களிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்:
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள் மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் சரிசெய்தல் போன்ற பணிகள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
எனவே, தோப்பூர், அமலிநகர், கடாட்சபுரம், மானாடு, செட்டிவிளை, சோலைகுடியிருப்பு, ஓடக்கரை, பூந்தோட்டம், தெற்குமறந்தலை, இடையன்விளை, நாலுமாவடி, வீரமாணிக்கம், பொத்தகாளன் விளை, நரையன்குடியிருப்பு, பழங்குளம், சவேரியார்புரம், உடையார்குளம், அழ்வார்தோப்பு, வரதராஜபுரம், இலங்கநாதபுரம், இராமசாமிபுரம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, புதுமனை பள்ளிவாசல், மணப்பாடு, சுண்டங்கோட்டை, அம்பாள்குளம், உதிரமாடன் குடியிருப்பு, உடைபிறப்பு, கடகுளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.